நிறுவனத்தின் பின்னணி

img-11988 இல் திரு ஆர்.ஜெயராமன், தரமான அரிசி வழங்க நாள் ஒன்றுக்கு 6 டன் அரிசி வழங்க கூடிய சிறிய அளவிலான அரிசி ஆலை ஒன்றை நிறுவினார். அவருடைய முதைன்மை கவனமானது தரமான அரிசியை நிகரில்லா வாடிக்கையாளர் சேவையுடன் கொடுப்பதாக இருந்தது. அதுவே இன்றளவும் நிறுவனத்தின் வழிகாட்டுதலாக உள்ளது.

2006 ஆம் ஆண்டில், நிறுவனரின் இளைய மகன் ஜெ. தங்கபாண்டி நிறுவனத்தில் இணைந்தார். அவரது நோக்கம் நிறுவனத்தை உலக அளவில் எடுத்துச் செல்வது மற்றும் குடும்ப வர்த்தகத்தின் பொறுப்புகளை கவனிப்பதும் ஆகும். திரு தங்கபாண்டி அவர்கள் ” அன்னம் பிரம்ம ஸ்வரூபம்” என்ற கூற்றில் நம்பிக்கை உடையவர். மேலும் இதுவே இந்நிறுவனத்தின் வழிகாட்டும் கொள்கையும் ஆகும்.

வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் உறுதிமொழி

சமீபத்திய தொழில் நுட்பம், சுத்தமான தண்ணீர் மற்றும் காற்றை கொண்டு நெல்லானது அதன் இயற்கை தன்மை மாறாமல் தரமான அரிசியாக பதப்படுத்த படுகிறது. நெல் கொள்முதல், அரவை மற்றும் பைகளில் நிரப்புதல் ஆகிய பல்வேறு நிலைகள் உயர் தர கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சிறந்த மற்றும் தரமான அரிசி வாடிக்கையாளரை சென்றடைகிறது.

வாடிக்கையாளர் குறைகள் 48 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யப்படும்.

நிறுவனத்தின் நோக்கம் மற்றும் பணி

நோக்கம்

இந்தியாவின் சிறந்த அரிசி தயாரிப்பாளராக இருப்பது.

பணி

உலகத்தரம் வாய்ந்த அரிசி வழங்குதல், சிறந்த வாடிக்கையாளர் சேவை, பணியாளர்களின் வாழ்க்கை தரம் உயர்த்துதல், சமுதாய மற்றும் விவசாயிகளின் நலனிற்கு பங்களிப்பது ஆகும்.